Tuesday, May 18, 2010

கவிதை

சிறாராக,
பள்ளி முடிந்து திரும்புகையில்
யார் முதலில் 
நம் தெருமுனை தொடுவது 
என்றொரு போட்டி,
கன மழை,
இருவரின் கையிலும் குடை,
ஆனாலும் நனைந்த படி
முதலில் தெருமுனை தொட்டேன். 

கண்ணீருடன் நீ 
உன் வீடு சென்றாய்,
அன்று முதல் உன்னிடம்
தோற்க ஆரம்பித்தேன்.



தோற்ற என்னை 
சில நேரங்களில் 
எள்ளி நகையாண்டாலும்,
என்றுமே
ஜெயிக்க விட்டதில்லை
மழை நீரில் 
நீ விட்ட கண்ணீர்.

நீ
பெரிய மனுஷியாகிவிட்ட
போது வெட்கப்பட்டதை
சேமித்து வைத்திருக்கிறேன்
அடுத்த ஜென்மத்திற்கும் சேர்த்து




நம் திருமணத்தன்று இரவு
யாருக்கும் தெரியாமல்
உன் அறையில் 
நான் நுழைந்து முத்தமிட்டு,
முன் வைத்த 
பந்தயத்தில் ஜெயித்தேன்,
உனக்கும் பிடிக்கும் என்பதால்!

திருமண நாள் அதிகாலை,
எல்லோரும் முழிக்கும் முன் 
யாருக்கும் தெரியாமல்
நாம் இருவரும்
சமையல் அறையில்
முத்தத்துடன் காபி பருகியது
யாருக்கு தெரியும்?
அந்த காபியின் 
கடைசி சொட்டு ருசி
இன்றுவரை 
எங்கேயும் கிடைக்கவில்லை!

தாலி கட்டிய போது
ஏன் அழுதாய் 
என்று கேட்டதற்கு
உதடு சுழித்து தெரியாதென்றாய்,
எனக்கு
பதில் கிடைக்காவிடினும் 
நீ உதடு சுழித்தது
பிடித்துப் போனது




முதலிரவு அன்று
நமக்குள் ஓடிய 
குதிரைகள் அடங்கிய பின்
நீ கொடுத்த முத்தம் சொன்னது
காதலையா காமத்தையா?

வியர்வை துடைத்து விட்ட போது
காதில் கேட்டாய் 
"இன்னுமொருமுறை இந்த
வியர்வை வேண்டுமா
இல்லை நான் வேண்டுமா?"
எதை எடுப்பது, எதை விடுப்பது?

நமக்குள் கூடல்கள் அதிகம்,
ஊடல்களை விட!
மழலையின் புன்னகை பார்த்து
நாம் மறந்த ஊடல்கள்
அதை விட அதிகம்.




மகளை பள்ளிக்கு
அனுப்பிய அந்த 
முதல் நாளில்,
சிரித்தபடி டாட்டா சொன்னது
என் செல்ல மகள், 
கண்ணீருடன் நீ,
எனக்குள் ஐயம்
இருவரில் யார் குழந்தை?

மகளுக்கு
முதலில் தாவணி அணிய
சொல்லித் தருகையில்,
நீ வெட்கப்பட்டதை பார்த்து
மகள் திட்டியதும்,
அதற்காக என்னிடம் நீ முறையிட்டபோது
நான் சிரித்ததையும்
நம் முற்றத்து விநாயகரைத்
தவிர வேறு யாருக்குத் தெரியும்? 



செல்ல மகள் திருமணம்,
கண்ணீருடன் நான்,
விசும்பலுடன் நீ,
இவ்வளவு நாள் மகள் 
அணைத்து உறங்கிய
டெடி கரடி
அனைத்தும் அன்றுதான்
தனிமையாய்!

பேரனுடன் கொஞ்சிய நாட்களில்
நாம் கண்ட பேரின்பம்
நாம் வணங்கிய
தெய்வங்கள் தந்ததில்ல!



என்னை விட்டு 
நீ இறைவனிடம்
சென்ற பிறகும் பல 
இரவுகள் இப்படித்தான்
இந்த கவிதைகளை
படித்து சுகம் காண்கிறேன்.
இன்னும் குறையவில்லை
நீ கொடுத்த சுகங்கள்!


இன்று
தனியறையில் நான், 
உன் நினைவுகளோடு
வாழ்ந்தபடி.
ஒரு முற்றுபுள்ளியா
நம் சுகதுக்கத்தை
முடிவு செய்யப்போகிறது?

என்னுள் இருக்கும்
இந்த நினைவுகளை
உனக்கு வந்த 
மரணத்தால் 
அழிக்கமுடியவில்லை.

உன்னிடம் வந்துவிட
காலதேவனை வேண்டியபடி 
கண்ணீரையும்,
உன் நினைவுகளையும் சுமந்தபடி,
இன்னும் நான்!


இந்த கவிதை மெயிலில் வந்தது.....

47 comments:

Menaga Sathia said...

super kavithai!!

எல் கே said...

excellent malar

நாடோடி said...

ஒருவ‌ரின் வாழ்க்கையில் ந‌ட‌க்கும் மொத்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளையும் உள்ள‌ட‌க்கிவிட்ட‌து... ப‌கிர்விற்கு ந‌ன்றி..

நசரேயன் said...

//இந்த கவிதை மெயிலில் வந்தது....//

அதான் நல்லா இருக்கு

Chitra said...

Thank you for sharing it with us. :-)

sathishsangkavi.blogspot.com said...

அனைத்தும் அருமை...

வேலன். said...

மனிதன் ஆரம்பம் முதல் முடிவு வரை வாழ்வின் அனைத்து நிகழ்ச்சிகளையும் கவிதை வடிவில் கொடுத்தது அருமை.ஆனால் முடிவில் தான் தானே கண்களில் நீர்..முடிவு சோகமாகதர்ன் இருக்கனுமா? வாழ்க வளமுடன்,வேலன்.

ஸாதிகா said...

நீண்ட கவிதையாக இருந்தாலும் வாழ்வியலை அழகாக எடுத்து சொல்லும் நெடுங்கவிதை

ஜெய்லானி said...

தலைப்புதான் சின்ன புள்ளதனமா இருக்கு . அதாவது மழழைதனமா!!. இன்னும் புரியலையா ?.

மனசே ஒரு குழந்தைதானே!! கவிதையும் , தலைப்பும் சூப்பர்..

சாமக்கோடங்கி said...

யார் எழுதி இருந்தாலும் அருமையாக இருக்கிறது.. பிரசுரித்ததற்காக மலருக்கு வாழ்த்துகள்...

நன்ட்றி..

malar said...

@Mrs.Menagasathia

உங்கள் வருகைக்கு நன்றி.....

malar said...

@LK

நன்றி உங்கள் வருகைக்கு....

malar said...

@நாடோடி

ஆமாம் நாடோடி...இந்த கவிதை என்னிடம் கிட்ட தட்ட ஒருவருடமாக இருக்கிறது..ஒருவ‌ரின் வாழ்க்கையில் ந‌ட‌க்கும் மொத்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளையும் உள்ள‌ட‌க்கியது..போடவா வேண்டாமா என்று யோசிக்கிம் போது ஜலீலா தான் போடுங்க என்று ஐடியா கொடுத்தாங்க...

malar said...

@நசரேயன்
நன்றி திரு.நசரேயன் ..அது தான் உண்மை..

malar said...

@Chitra

thnx for the comment chitra

malar said...

@Sangkavi

நன்றி சார்....

malar said...

@வேலன்.

நன்றி வேலன்...

malar said...

@ஸாதிகா


ஆமாம் ஸாதிகா..நன்றி உங்கள் வருகைக்கு...

malar said...

@ஜெய்லானி

வாங்க ஜெய்லானி தலைப்பு சின்னபுள்ளதனமா இருக்கா ...அப்ப நீங்க பெரியபுள்ளதனமா ஒரு தலைப்பு சொல்லுங்க...கவிதை ரீச் ஆச்சா இல்லையா?

malar said...

@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி

கவிதை அருமையாக இருந்ததால் தான் போட்டேன் சார்..உங்கள் கருத்துக்கு நன்றி....

ஜெய்லானி said...

ஹா..ஹா..நல்லா இருக்குங்க!! . முதல் வரியையே தலைப்பா வச்சுட்டீங்களே அதுக்காக சொன்னேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்

Asiya Omar said...

மலர்,அருமை.நல்ல பகிர்வு.

Asiya Omar said...

மலர்,அருமை.நல்ல பகிர்வு.

Prathap Kumar S. said...

கவிதை அட்டகாசம்...

மெயில்ல வந்த கவிதையா...
அதானே பார்த்தேன் மலரக்காகுள்ள இவ்ளோ திறமை ஒளிஞ்சிருக்கான்னு நினைச்சேன்...:))

malar said...

@asiya omar நன்றி...

@நாஞ்சில் பிரதாப்பு...சமயம் வரட்டும் பார்போம்...

பனித்துளி சங்கர் said...

ஒவ்வொரு கவிதையிலும் காதல் வார்த்தைகளில் துயில்கொள்கிறது . அனைத்தும் அருமை . பகிர்வுக்கு நன்றி !

அம்பிகா said...

கவிதை அருமையா இருக்கு மலர்.
பகிர்வுக்கு நன்றி.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//மகளை பள்ளிக்கு
அனுப்பிய அந்த
முதல் நாளில்,
சிரித்தபடி டாட்டா சொன்னது
என் செல்ல மகள்,
கண்ணீருடன் நீ,
எனக்குள் ஐயம்
இருவரில் யார் குழந்தை?//

very nice.. liked these lines a lot.. :)

அமைதி அப்பா said...

உங்கள் மகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இது நல்ல மதிப்பெண்ணாக தெரிகிறது.
மருத்துவம் படிக்க நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும்.

ஜெய்லானி said...

###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################

காஞ்சி முரளி said...

"கவிதை" தலைப்பிலான கவிதை...

எதை தொடுவது...
எதை விடுவது...
என்ற கேள்வியுடனே...?

பலமுறை
பயின்றும்...
விளக்க முடியாத
வரிகள்...

மனது
மீண்டும்..மீண்டும்... அசை போட்டு
மனப்பாடம் செய்துகொண்டேயிருக்கிறது...

நெஞ்சுருக்கி...
உயிருலுக்கி...
உள்ளத்திலூடி...(உள்ளத்தில் ஊடி)
உணர்வுகளைத் தாக்கி....

என்னை
செயலிழக்கச்
செய்தது...
இந்த
"கவிதை" தலைப்பிலான கவிதை...

இவ்வுணர்வினை...
வடித்தவர்க்கும்...
வலைதளத்தில்.
வெளியிட்ட
தங்களுக்கும்...

பாராட்டுக்கள்..
பாராட்டுக்கள்....!

நட்புடன்...
காஞ்சி முரளி....

Jaleela Kamal said...

மெயிலில் வந்தாலும் எல்லோரும் சுவைக்க பகிர்ந்து கொண்டீர்கள்,

அருமை. நன்றி

அமைதி அப்பா said...

கல்வி மலரில் நான் படித்த செய்தி. உங்களுக்கு தகவலுக்காக.......

இரண்டாயிரத்தை தாண்டுகிறது மருத்துவ இடங்கள் : மாணவர்கள் மகிழ்ச்சி - 23-05-2010

தமிழகத்தில் இரு அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இரு தனியார் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) அனுமதி வழங்கியிருப்பது, மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் மருத்துவ இடங்கள் கவுன்சிலிங் வழியாக பூர்த்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 15 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இத்துடன், இந்த ஆண்டு புதிதாக திருவாரூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 அரசு மருத்துவக் கல்லூரிகள் சேர்கின்றன. இரண்டு கல்லூரிகளும் இந்திய மருத்துவ கவுன்சிலின் மாணவர் சேர்க்கைக்கான "லெட்டர் ஆப் பெர்மிஷன் (எல்.ஓ.பி.,)&' அனுமதி பெற்றுள்ளன.

தமிழகத்தில் 4 தனியார் மருத்துவக் கல்லூரிகள் தற்போது அட்மிஷனுக்கு தயாராக உள்ளன. மேலும் இந்த ஆண்டு புதிதாக ஸ்ரீ முத்துகுமரன் மற்றும் தாகூர் ஆகிய 2 மருத்துவக் கல்லூரிகளும் எம்.சி.ஐ., அனுமதி பெற்றுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 15 சதவீதம் மத்திய ஒதுக்கீடாகவும், 85 சதவீதம் மாநில ஒதுக்கீடாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

தனியார் (சிறுபான்மை) மருத்துவக் கல்லூரிகளில் 65 சதவீதம் மாநில அரசு ஒதுக்கீடுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீடுக்கும் வழங்கப்படுகின்றன. தனியார் (சிறு பான்மை அல்லாத) கல்லூரிகளில் 50 சதவீதம் மாநில அரசு ஒதுக்கீடாகவும், 50 சதவீதம் நிர்வாக ஒதுக்கீடாகவும் உள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சிலின் இந்த ஆண்டு பட்டியலின் படி, அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்கள் 1895.

இதில் 285 இடங்கள் மத்திய ஒதுக்கீடுக்கும், மீதமுள்ள 1610 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீடுக்கும் வழங்கப்படுகின்றன. தனியார் கல்லூரிகளின் மொத்த இடங்கள் 760. இதில் 283 இடங்கள் நிர்வாக ஒதுக்கீடுக்கு வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 477 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீடுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு (புதிதாக சேரும் தலா இரண்டு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் இடங்களையும் சேர்த்து) மொத்தம் 2087 இடங்களுக்கு கவுன்சிலிங் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chitra said...

http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_11.html

:-)

cheena (சீனா) said...

அன்பின் மலர்

அருமை அருமை கவிதை அருமை - படங்களோ அதை விட அருமை. வாழ்வின் அத்தனை பாகங்களையும் அழகாகக் கூறும் கவிதை.

வியர்வை வேண்டுமா - நான் வேண்டுமா

கூடல்கள் ஊடல்களை விட அதிகம்

முதல் இரவுக்கு முன் முதல் முத்தம்

காபியுடன் முத்தம் - கடைசித்துளியின் ருசி

அட்டா அட்டா என்ன கற்பனை ! என்ன கற்பனை !

நல்வாழ்த்துகள் மல்ர்
நட்புடன் சீனா

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான பகிர்வு.

அன்புடன் மலிக்கா said...

யார் எழுதியெதென்ரபோதும் கவிதை மிக அருமை மலர்.

எப்படிப்பாயிருக்கீங்க ஆளையே காணோம். பசங்க நலமா?

R.Gopi said...

பிரமாதமா இருக்கு....

அதிலும், அது ஃபார்வர்ட் மெயிலில் வந்தது என்று சொல்லிய தைரியம் எனக்கு மிகவும் பிடித்தது....

கலக்கல் கவிதை... பகிர்ந்தமைக்கு நன்றி மலர்..........

ஹேமா said...

யார் எழுதினாலும் காதல் உணர்வு ஒன்றாய்த்தான் இருக்குமோ !

Muruganandan M.K. said...

வாழ்வின் கூறுகளைக் கூறுபோடாமல்
ஆழ் உணர்வோவியமாக
செழுமையான வார்த்தைகளால்
தீட்டிய கரங்களுக்கு நன்றி

Muruganandan M.K. said...

"...கண்ணீருடன் நீ
உன் வீடு சென்றாய்,
அன்று முதல் உன்னிடம்
தோற்க ஆரம்பித்தேன்..."

அருமையான கவிதை.

MANO நாஞ்சில் மனோ said...

//நீ
பெரிய மனுஷியாகிவிட்ட
போது வெட்கப்பட்டதை
சேமித்து வைத்திருக்கிறேன்
அடுத்த ஜென்மத்திற்கும் சேர்த்து//


அடடடா அருமையா இருக்கே கவிதை....

வை.கோபாலகிருஷ்ணன் said...

எழுதியவருக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

பகிர்ந்த தங்களுக்கு நன்றிகள்.

கவிதை என்றால் இதுவல்லவோ கவிதை.

ஆஹா, ஒவ்வொரு உணர்வுகளிலும் தேன் சொட்டுதே!

இன்று 24.04.2011 அன்று தான் படித்தேன். அன்புடன் vgk

vasan said...

குழ‌ந்தைக‌ளாய் ம‌ழையில் க‌ண்ணீர் போட்டியில் துவ‌ங்கி,
இரு த‌லைமுறையைத் தாண்டி, இறுதியில் நின‌வுக் க‌ண்ணீரில்
நிறைவ‌டையும் முழுமையான வாழ்வை உள்ள‌ட‌க்கிய‌ நல்ல‌ க‌விதை.

இராஜராஜேஸ்வரி said...

மரணப் படுக்கையிலும் மறக்காத மனையாளின் மலரும் நினைவுகள்.

சி.பி.செந்தில்குமார் said...

உருகுதே உருகுதே..

...αηαη∂.... said...

நல்லா இருக்கு :)