Monday, November 16, 2009

அனுபவம்



AIRTEL செய்யும் அநியாயம் தாங்க முடியவில்லை .அவர்களே நமக்கு ஒரு sms அனுப்புவார்கள் அதை திறந்து பார்த்தால் 10 பைசா கட்டணம் நம்ம பைசாவில் இருந்து களியும் இது தினம் வரும் .நம்ம பைசா களியும் .இந்த விவரம் தெரியவே கொஞ்ச நாள் ஆச்சு .இது எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் வரும் .சர்விஸ் sms என்று ஒரு நாளைக்கு குறைந்தது 10 வரும் .எல்லோரும் ஆங்கிலம் தெரிந்தவர்களும் இல்லை .அப்புறம் உனக்கு பைசா போக்குதா ?என்னக்கு போகுது என்று கண்டுபிடுத்து கஸ்டமர் கேரில் சொல்லி சரிங்க மேடம் இனிவராது மேடம் சாரி மேடம் லவிக மேடம் என்று சொல்லி முடித்தான் .


எங்க மைனியார் போனுக்கு ஒரு சிம் வாங்கி போட்டோம் அதில்ல ar ரகுமான் ரிங் டோன் இவ வயசுக்கு இது தேவையா என்று நாங்க ஒர்த்தருக்கு ஒருத்தர் சொல்லி சிரிப்போம் அது 2 மாதத்திற்கு பிறக்கு தான் தெரியும் மாதம் 30 ரூபாய் அவுட் ன்னு .பழையபடி அவனுக்கு போன் போட்டு வேண்டாம் ஐயா ஆளவிடுன்னா மாச கடைசில்ல போன் போடுக்ங்க மேடம் ன்னா(மேடத்துக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை )மாச கடைசில்ல போட்டு அதையும் நீக்கியாச்சு அப்புறம் அவன் sms அனுப்புறான் இனி போர் அடிக்கிற டோன கேட்டுட்டா இருங்க என்று .மேலும் கேளுங்க நல்ல நேரத்தில் போன் அடிக்கும் என் மருமவ சொல்லுவா மாமி போன எடுக்காதேங்க அவன்தான் போன் காரன் ஏதாவது ஒளருவான் அதையும் மீறி எடுத்தால் அவ சொன்ன மாதிரி அந்த ஆபர் இந்த அபிர்ந்னு ஏதாவது சொல்லுவான்

அப்புறம் என்ன அநியாயம் பார்த்தால் சொகாம் அதான் ஜோக் படுபாவி அணிப்பிட்டு ஒரு ரூபாய் முழங்கி விடுகிறான் .அதும் இங்கிலிபீஸ்ல எங்க அம்மா போனுக்கு இப்படி தினம் 4 அல்லது 5 இதையும் கண்டுபிடுத்து அவனுக்கு போன் போட்டா ஏலு எட்டு கேள்வி கேக்குறான் .யார்பேர்ல இருக்கு ? கடசியா எப்ப ரீசார்ஜ் பண்ணுன ? இந்த எழவெல்லாம் நெனவு வச்சிக்கவா நேரம் .
இவங்களுக்கு airtel போட பிடுசுக்கிட்டு நல்ல ஜன நடமாட்டம் உள்ள இடத்தில நின்ன ஜனங்க துட்டு போடுவாங்கல்லா ?

இவங்கள மாதிரி ஆளுங்க கிட்ட நல்ல உசாரா இருக்கணும் அல்லது நம்ம போனேயே அவங்கலோடதுன்னு சொன்னாலும் சொல்லுவாங்க