Wednesday, December 16, 2009

மன-நோய்கள் - சில உண்மைகள்

1. நம் நாட்டில் மக்கள் தொகையில் 22 சதவீதம் பேர் மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நம்மில் நான்கில் ஒருவர் ஏதாவது ஒரு வகை மனநோயினால் அவதியுற்று வருகிறோம்.

2. உடலைப் போன்றே மனமும் எப்பொழுது வேண்டுமானாலும் நோயுறலாம்.

3. தலைவலி, காய்ச்சல், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு நோய் போன்ற உடல் நோய்களைப் போலவே மனநோய்களும் எளிதில் குணப்படுத்தக் கூடியவை.

4. மனநோய்கள் பில்லி, சூனியம், ஏவல், கிரகங்கள் பதிப்பு அகியவற்றின் காரணமாக எற்படுவதில்லை.

5. மரபு வழி சாத்தியக் கூறுகள் மற்றும் மன உலைச்சல்கள் ஆகியன மூளையில் எற்படுகின்ற இரசாயன மாற்றங்களால் தான் மன நோய்கள் ஏற்படுகின்றன.

6. மந்திரம் செய்வது, திருநீர் போடுவது, கயிறு கட்டுவது, சாமியாரிடம் செல்வது தீவிர வழிபாடு மற்றும் கோவில்களில் சென்று தங்குவது ஆகியன மனநோயினை எந்த விதத்திலும் குணப்படுத்த உதவாது.

7. மனநோயின் தன்மையை முழுமையாக அறிந்து கொள்ளுதல், தொடர்ந்து மருந்துக்கள் உட்கொள்ளுதல் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு, மனோநோயாளிகளைப் புரிந்துகொண்டு அவர்களிடம் அன்போடும் அரவணைப்போடும் நடந்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் மனநோயாளிகளை எளிதில் குணப்படுத்தலாம்.

8. மனநோய்கள் குறித்து போதிய விழிப்புணர்வின்மை, ஆரம்ப நோய் அறிகுறிகளை அலட்சியம் செய்தல், தொடர்ந்து மருந்துகள் உட்கொள்ளாமை, குடும்பத்தாரின் போதிய ஒத்துழைப்பின்மை, சமூகத்தின் எதிர்மறையான பார்வை ஆகிய காரணங்களால் தான் மனநோய்களை கையாளுவது கடினமாக உள்ளதே தவிர மற்றபடி மனநோய்களை போன்று முழுமையாக குணப்படுத்தக் கூடியவையே.

மனச்சோர்வு நோய் (Depression)

· மனக்கவலை

· அதிகாலை தூக்கமின்மை

· மிகுந்த சோர்வு

· பசியின்மை

· எடை குறைவு

· அடிக்கடி அழுதல்

· தன்னம்பிக்கையின்மை

· எதிலும் ஆர்வமின்மை

· அதிகமான குற்ற உணர்வு

· அடிக்கடி தற்கொலை எண்ணங்கள்

மனச்சிதைவு நோய் (Schizophrenia)

· தொடர் துக்கமின்மை

· தனக்கத்தானே பேசிக் கொள்ளுதல்

· தனக்கத்தனே சிரித்துக் கொள்ளுதல்

· காதில் மாயக்குரல்கள் கேட்டல்

· அதிகமாக சந்தேகப்படுதல்

· அவைவரும் தன்னைப் பற்றியே பேசுவதாக உணர்வு

· சுற்றத்தார்கள் அனைவரும் தனக்கு எதிராக செயல்படுகின்றனர் என்ற தவறான நம்பிக்கை

· உடல் தூய்மை படிப்படியாக் குறைதல்

மனப்பதட்ட நோய் - (Anxiety Disorder)

· நெஞ்சு படபடப்பு

· கை நடுக்கம்

· அதிகமாக வியர்த்தல்

· நெஞ்சுவலி

· கவனம் செலுத்த இயலாமை

· தூக்க குறைவு

· அடிக்கடி எரிச்சல் அடைதல்

· எதிர்மறையான எண்ணங்கள்

பயம் நோய் (Phobia)

· தனிமையில் இருக்க பயம்

· கூட்டத்தினைக் கண்டுபயம்

· புதிய நபர்களை எதிர்கொள்ள பயம்

· உயரமான இடங்களுக்கு சென்றால் பயம்

· மூடிய இடங்களை கண்டு பயம்

· இந்த பயங்கள் தேவையற்றது என கருதி தவிர்க நினைத்தும் இயலாத நிலை

எண்ணம் மற்றம் செயல் சுழற்சி நோய்

· திரும்ப திரும்ப ஒரே எண்ணங்கள் மனதிற்குள் வந்து தொல்லை தருவத, தேவையற்றது என தெரிந்து தவிர்க்க முற்பட்டும் முடியாத நிலை.

· ஒரு நாளின் பெரும் பகுதி இந்த எண்ணங்களோடு போராடுவதிலேயே செலவாகிவிடுவது

· திரும்ப திரும்ப ஒரே செயலை செய்து கொண்டு இருப்பது

உதாரணமாக:

1. திரும்ப திரும்ப கை அழுக்காக இருப்பதாக நினைத்து கை அலம்புதல்

2. பூட்டினை மீண்டும் மீண்டும் இழுத்து சரிபார்ப்பது

3. பணத்தினை மீண்டும் மீண்டும் எண்ணி சரிபார்ப்பது

· ஒரு செயலை திரும்ப திரும்ப பலமுறை செய்தால் மட்டுமே திருப்தி ஏற்படுவது.

· தவிர்க்க முற்படும்பொழுது திருப்தியின்னையும், மனபதற்றமும் ஏற்படுவது.

· குளிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது.

ஆளுமை கோளாறுகள் (Personality Disorders)

· அடிக்கடி கோபம் கொள்ளுதல்

· குறுகிய கால குணமாறாட்ட அறிகுறிகள்

· மற்றவர்களுடன் உள்ள உறவுகளை அடிக்கடி முறித்துக் கொள்ளுதல்

· உடல் உறுப்புகளை தானே காயப்படுத்திக் கொள்ளல்

· கலவரங்களில் ஈடுபடுதல்

· சமூகத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுதல்

· மற்றவர்களுடன் அதிகம் பழகாமல் தனித்து ஒதுங்கி வாழ்தல்

· பெற்றோர்களுக்கு கீழ்படியாமை

· எப்பொழுதும் சோர்வாகவும், மந்தமாகவும் இருத்தல்

· எப்பொழுதும் பதற்றமாக இருத்தல்

பெண்களும் மனநோய்களும்
மாதவிடாய் நாட்களுக்கு சிறிது முன்பாக

· அதிக எரிச்சல்

· கோபம்

· சோர்வு

· பதற்றம்

இவை, மாதவிடாய் முடிந்ததும் சரியாகிவிடும்.

கர்பிணி பெண்களும் மனநோய்களும்

· குழந்தைகளுக்கு பால் ஊட்டாமை

· அடிக்கடி அழுதல்

· தூக்கமின்மை

· பசியின்மை

· தற்கொலை எண்ணங்கள்

· தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், சிரித்துக்கொள்தல்

முதியோர்களை பாதிக்கும் மனநோய்கள்

· தொடர் தூக்கமின்மை

· மறதி

· பொருட்களை வைத்த இடத்தை மறத்தல்

· நாள், கிழமை மறந்து விடுவது

· உறவினர், நண்பர்களை மறந்து விடுவது

· அடிக்கடி எரிச்சல் கோபம் கொள்வது

· பசியின்மை

இதர மனநோய்கள்

· சாமியாட்டம்

· புகை பிடித்தல்

· மது அருந்துதல்

· கணவன் மனைவி பிரச்சனைகள்

· மனரீதியான பாலியல் பிரச்சினைகள்

குழந்தைகளை பாதிக்கும் மனநோய்கள்

· குழந்தைகள் பள்ளி செல்ல பயப்படுதல்

· படிப்பில் கவனம் குறைதல்

· அதிக கோபம் கொள்ளுதல்

· அடிக்கடி எரிச்சல் அடைதல்

· படுக்கையில் சிறுநீர் கழித்தல்

· மிக மிக அதிக சுறுசுறுப்போடு ஆனால் கவனம் இல்லாமல் இருத்தல் (ADHD)

· கீழ்படியாமை

· அடிக்கடி பொய் சொல்வது

· திருடுவது

· குழந்தைக்கு திடீரென்று மூச்சு நின்றுபோய் திரும்பவருதல் (Breath holding spell)

· 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் (PICA) சாப்பாடு அல்லாத மற்ற பொருட்களை உண்ணுதல் (உதரணமாக சாம்பல், மண், பேப்பர், பென்சில் சாப்பிடுவது)

· மிக பிடிவாதம் பிடித்து தரையில் உருண்டு புரள்வது (Temper Tantrums)

· நன்றாக படிக்கும் மாணவன் திடீரென்று படிப்பில் பின்தங்குவது (Changes in academic performance)

· குழந்தையை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது அம்மாவைவிட்டு பிரிதலில் பதட்டம் (Separation anxiety disorder)

இது எனக்கு வந்த மெயிலில் படித்தது .நிங்களும் படித்து உங்கள் ஓட்டை போட்டு கம்மேண்டயும் எழுதுங்கள் .

11 comments:

அண்ணாமலையான் said...

”மந்திரம் செய்வது, திருநீர் போடுவது, கயிறு கட்டுவது, சாமியாரிடம் செல்வது தீவிர வழிபாடு மற்றும் கோவில்களில் சென்று தங்குவது ஆகியன மனநோயினை எந்த விதத்திலும் குணப்படுத்த உதவாது.”
வழி மொழிகிறேன்..

malar said...

வாத்தியார் அவர்களே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ........

வேலன். said...

தங்கள் கட்டுரை அருமை சகோதரி...
மாதத்திற்கு ஒரே ஓரு கட்டுரை எழுதும் தாங்கள் இன்னும் அதிக கட்டுரைகள் எழுத ஆசைப்படுகின்றோம்...
(ஓரு சின்ன திருததம்-தங்கள் கட்டுரையில் தலைப்பும்(நோய்களும்) விளக்கங்களும் ஒரே மாதிரியாக உள்ளது..தலைப்பை போல்ட்டாகவோ - அல்லது -சிறிது இடைவெளி விட்டோ போட்டால் இன்னும் அருமையாக இருக்கும்)

வாழ்க வளமுடன்,
வேலன்.

Unknown said...

தங்களுடைய பதிவு மிகவும் அருமை. முற்றிலும் உண்மை. ஆனால் ஒரே ஒரு தவறு செய்துள்ளீர்கள். ஆதாவது உலகத்தில் வாழும் மக்களில் 80 சதவிதத்தினர் ஏதோ ஒரு மணநோயால் பாதிக்கபட்டுள்ளனர். இதற்கு முழுமுதற் காரணம் சுயநலம். எப்பொழுது பொது நலம் மற்றும் மனித நேயம் பெருகுகிறதோ அப்பொழுது தான் இந்த உயிர்க்கொள்ளி நோய் குணமாகும். நனறி.

இராயர் said...

பயனுல்ல கட்டுரை
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கல்

malar said...

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி வேலன் சார் !
நீங்கள் சொன்ன மாதிரி மாற்றி விட்டேன் .

malar said...

முகம்மது பிஸ்மில்லா,இராயர் அமிர்தலிங்கம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

Anonymous said...

ந‌ல்ல‌ க‌ட்டுரை ம‌ல‌ர்

Prathap Kumar S. said...

//”மந்திரம் செய்வது, திருநீர் போடுவது, கயிறு கட்டுவது, சாமியாரிடம் செல்வது தீவிர வழிபாடு மற்றும் கோவில்களில் சென்று தங்குவது ஆகியன மனநோயினை எந்த விதத்திலும் குணப்படுத்த உதவாது.”//

நானும் வழிமொழிகிறேன்...:-)

நல்லாருக்குங்க... எனக்கும் நீங்க சொன்னதுல சில பிரச்சனைகள் இருக்கு... எப்படி தவிர்ப்பது? மனோதத்துவ டாக்டர்கிட்ட போனுமா?

வேலன் சொன்னமாதிரி பத்தி பத்தியா எழுதுவம். பான்ட் அளவை குறைக்கவும் .. இன்னும் படிச்ச வசதியாக இருக்கும்.. :-)

இப்படில்லாம் உருப்படியா நான் எழுதனதே கிடையாதுங்க... ஒரே மொக்கை மட்டும்தான்..:-)

goma said...

அருமையான ஆய்வு.

abikutty said...

really nice...