Monday, November 16, 2009

அனுபவம்



AIRTEL செய்யும் அநியாயம் தாங்க முடியவில்லை .அவர்களே நமக்கு ஒரு sms அனுப்புவார்கள் அதை திறந்து பார்த்தால் 10 பைசா கட்டணம் நம்ம பைசாவில் இருந்து களியும் இது தினம் வரும் .நம்ம பைசா களியும் .இந்த விவரம் தெரியவே கொஞ்ச நாள் ஆச்சு .இது எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் வரும் .சர்விஸ் sms என்று ஒரு நாளைக்கு குறைந்தது 10 வரும் .எல்லோரும் ஆங்கிலம் தெரிந்தவர்களும் இல்லை .அப்புறம் உனக்கு பைசா போக்குதா ?என்னக்கு போகுது என்று கண்டுபிடுத்து கஸ்டமர் கேரில் சொல்லி சரிங்க மேடம் இனிவராது மேடம் சாரி மேடம் லவிக மேடம் என்று சொல்லி முடித்தான் .


எங்க மைனியார் போனுக்கு ஒரு சிம் வாங்கி போட்டோம் அதில்ல ar ரகுமான் ரிங் டோன் இவ வயசுக்கு இது தேவையா என்று நாங்க ஒர்த்தருக்கு ஒருத்தர் சொல்லி சிரிப்போம் அது 2 மாதத்திற்கு பிறக்கு தான் தெரியும் மாதம் 30 ரூபாய் அவுட் ன்னு .பழையபடி அவனுக்கு போன் போட்டு வேண்டாம் ஐயா ஆளவிடுன்னா மாச கடைசில்ல போன் போடுக்ங்க மேடம் ன்னா(மேடத்துக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை )மாச கடைசில்ல போட்டு அதையும் நீக்கியாச்சு அப்புறம் அவன் sms அனுப்புறான் இனி போர் அடிக்கிற டோன கேட்டுட்டா இருங்க என்று .மேலும் கேளுங்க நல்ல நேரத்தில் போன் அடிக்கும் என் மருமவ சொல்லுவா மாமி போன எடுக்காதேங்க அவன்தான் போன் காரன் ஏதாவது ஒளருவான் அதையும் மீறி எடுத்தால் அவ சொன்ன மாதிரி அந்த ஆபர் இந்த அபிர்ந்னு ஏதாவது சொல்லுவான்

அப்புறம் என்ன அநியாயம் பார்த்தால் சொகாம் அதான் ஜோக் படுபாவி அணிப்பிட்டு ஒரு ரூபாய் முழங்கி விடுகிறான் .அதும் இங்கிலிபீஸ்ல எங்க அம்மா போனுக்கு இப்படி தினம் 4 அல்லது 5 இதையும் கண்டுபிடுத்து அவனுக்கு போன் போட்டா ஏலு எட்டு கேள்வி கேக்குறான் .யார்பேர்ல இருக்கு ? கடசியா எப்ப ரீசார்ஜ் பண்ணுன ? இந்த எழவெல்லாம் நெனவு வச்சிக்கவா நேரம் .
இவங்களுக்கு airtel போட பிடுசுக்கிட்டு நல்ல ஜன நடமாட்டம் உள்ள இடத்தில நின்ன ஜனங்க துட்டு போடுவாங்கல்லா ?

இவங்கள மாதிரி ஆளுங்க கிட்ட நல்ல உசாரா இருக்கணும் அல்லது நம்ம போனேயே அவங்கலோடதுன்னு சொன்னாலும் சொல்லுவாங்க

30 comments:

அன்புடன் அருணா said...

ஹாஹாஹா...உங்க வேதனை புரியுது!

ப்ரியமுடன் வசந்த் said...

எழுத்து பிழைகள் இருந்தும் சிரிக்க முடிகிறது...

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு, இது போல தான் படங்கள் அனுப்பி அதுக்கும் காசு புடுங்குவார்கள். நன்றி மலர்.

புலவன் புலிகேசி said...

சரிதான்.....

suvaiyaana suvai said...

ஹாஹா!!

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் ஆகா.....

R.Gopi said...

ஒரே ஒரு ஃபோன்காலா நம்ம இந்த பாடுபடுத்துவது??

வேதனையாக படித்தாலும், சிரிப்பு வருவதை தடுக்க முடியவில்லை...

இதற்கு என்ன தான் தீர்வு??

malar said...

வந்து கருது சொன்ன அனைவருக்கும் நன்றி .ஆனால் ஓட்டு போட மறந்து விட்டீர்கள். இனிபடிப்பவர்கள் மறக்கமால் ஓட்டு போடுங்கள் .நன்றி ....

Anonymous said...

ha ha ha

ஸ்ரீராம். said...

வோட் போட்டுட்டு அப்புறம் சிரிச்சேன். OK யா?

கௌதமன் said...

SMS இன்கமிங் - ப்ரீ தானே மலர்?
என்னுடைய ஏர்டெல் ப்ரீ பெயிட் - அதுல அவங்க ஒன்னும் சார்ஜ் செய்வதாகத் தெரியவில்லை. மற்ற வாசகர்கள் - அவங்க அனுபவத்தைச் சொல்லலாமே!

malar said...

நன்றி !திரு ஸ்ரீராம் கௌதம்

ஹுஸைனம்மா said...

நல்லா இருக்குது உங்க அனுபவங்கள்.

எழுத்துப் பிழைகள் காரணமா சில இடங்கள்ல என்ன சொல்ல வர்றீங்கன்னு ஒரு யூகத்திலதான் படிக்க வேண்டியிருக்கு. ஆனாலும் ருசிகரமா இருக்குது.

Sarathguru Vijayananda said...

உங்கள் ஆதங்கம் முழுவதும் இந்த பதிவில் உணர முடிகிறது. ரொம்ப கோவத்துல அடிச்சீங்களோ? எழுத்து தடுமாறி போயிருக்கு பல இடங்கள்ள...

நட்புடன் ஜமால் said...

நெசமாலும் போன் உங்களோடு தானா

நானும் ஏர்டெல்லோடதுன்னு நினைச்சி போட்டேன் போங்கோ ...

malar said...

நன்றி !திரு ஜமால் உங்கள் கருத்து எனக்கு சிரிப்பை தந்தது .உங்கள் வருகைக்கு நன்றி

malarvizhi said...

பதிவு நன்றாக இருந்தது. நம்முடைய பெயர் ஒரே மாதிரி இருந்ததால் உங்கள் வலைக்குள் உடனே வர தோன்றியது. நேரம் இருந்தால் என் வலைதளத்திற்கும் வருகை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Menaga Sathia said...

நல்ல ருசிகரமான பதிவு மலர்!!

Menaga Sathia said...

ஒட்டு போடமுடியவில்லை மலர்.தமிழீல் ப்ராப்ளமா என்று தெரியவில்லை..

அன்புடன் மலிக்கா said...

நல்ல சிரிப்பு.

Jaleela Kamal said...

தலைப்ப மாற்றி விட்டேன் .



ஹா ஹா ஹா ஹா சரியான பதிவு,
நானும் ஊரிலிருந்து அபப்டியே ஏர்டெல் போனை கொண்டு வந்து மறுபடி இப்ப போகும்போத்ய் கொண்டு போனா எல்லாம் பணமும் தீர்ந்து முடிந்து போச்சு.

அண்ணாமலையான் said...

உண்மைதான்.

Seenivasan K said...

use do not disturb service and avoid these kind of problems brother.

Anonymous said...

To change TATA DOCOMO , it is really good.

Unknown said...

avar solvathu correct.

Vodafonum itherkku vithi vilakku alla.

en anubhavam vodafone mulam.

Budget4U said...

unnai madiri padiparivillada makkaluku ellam idu kazhtamdan. othukaren

அண்ணாமலையான் said...

”unnai madiri padiparivillada makkaluku ellam idu kazhtamdan. othukaren” Sreesha said...”
யார சொல்றாங்க?
”வந்து கருது சொன்ன அனைவருக்கும் நன்றி .ஆனால் ஓட்டு போட மறந்து விட்டீர்கள். இனிபடிப்பவர்கள் மறக்கமால் ஓட்டு போடுங்கள் .நன்றி ....”malar said..
நம்ம பக்கம் வாங்க... ப்ளீஸ்..(ஆனா ஓட்டு போடனும்.)

malar said...

ஒட்டு போட்ட அனைவருக்கும் நன்றி..............


Sreesha said...

unnai madiri padiparivillada makkaluku ellam idu kazhtamdan. ஒத்துகறேன்

எனக்கு படிப்பறிவு இல்லை என்பதை கண்டுபிடித்து எழுதிய ஸ்ரீஷா அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

Premkumar Mani said...

அருமையன படைப்பு. நன்றி!!

Arunkumar said...

அம்மனி நீங்க திருநெல்வேலியா...? உங்க ஸ்லாங் நல்லா இருக்கு. உங்கள் ஆதங்கம் எங்களுக்கு புரிகிறது. மேலும் உங்கள் அனுபவங்களை தொடர்ந்து எழுதுவும்.

நன்றி...
அருண்குமார்