Friday, April 3, 2009

சிந்தனை !!

பணம் படைத்தவர்கள் அதிகமாக கோயில் , பள்ளிவாசல் என்று உண்டியலை நிரப்புவார்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் தனது ரத்த பந்தங்கள் வறுமையிலோ அல்லது படிப்பு செலவுக்கோ பணம் இல்லாமல் கஷ்டப்படுவார்கள் இவர்கள் கொடுத்து உதவமாட்டார்கள் .அவர்களுக்கு தெரியாதோ அதைவிட அதிக நன்மை இதில் உண்டென்று .

எனது வீட்டு பக்கத்தில் ஒருவர் வசதி படைத்தவர் மனைவியிடம் வெளியில் போகும் போது சொல்லிவிட்டு போவார் இப்படி! எந்த ஆன்மிகவாதி வந்து ஆண்டவன் பெயரில் பணம் கேட்டாலும் கொடுக்காதே எல்லாரும் ஏமாத்து காரப்பயளுவ என்று . சொல்லி விட்டு போய்ட்டார் அந்த அம்மாவும் யார் வந்து பணம் கேட்டாலும் கொடுக்காது .

ஒரு நாள் ஒருவர் அவரிடமே வந்து நாங்கள் மதம் சார்பாக பொதுகூட்டம் நடத்த போகிறோம் முடிந்த அளவு நிதி தாருங்கள் என்று கேட்டார் .வந்து கேட்டவரை இவருக்கு ஏற்கனவே தெரியும்
நான் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை பாவங்களுக்கு என்று கொடுக்குறேன் அதனால் கூட்டத்துக்கு பணம் தரமுடியாது என்று சொல்லிவிட்டார் .வந்தவரும் விடுவதாக இல்லை .
நீ எப்போது வந்து கேட்டாலும் பணம் தருவதில்லை உனக்கு சொர்கம் நரகம் என்ற பயம் இல்லையா என்று கேட்டார் அவரும் விடுவதாக இல்லை பதிலுக்கு சொன்னார்

நரகத்துக்கே ஒருவேளை நான் போறதாக இருந்தாலும் நான் மட்டும் போகமாட்டேன் என்னுடன் மேலும் ஆட்கள் எப்படியிம் வருவார்கள் அவர்களுடன் நானும் ஒருவனாக இருந்துகொள்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார் .
இது உண்மையில் நடந்த சம்பவம்.

ஏழைகளுக்கு செய்யும் உதவி இறைவனுக்கு செய்யும் உதவி என்று அவருக்கு தெரிந்து இருக்கிறது.

மறக்காமல் ஓட்டை போட்டுவிட்டு பின்னூட்டம் இடுங்கள் .

40 comments:

butterfly Surya said...

அருமை.

வாழ்த்துகள்.

Sathik Ali said...

நல்ல கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள்.உலகத்தையே படைத்த கடவுளுக்கு உண்டியல் எதற்கு?
இல்லாதவரின் வறுமை அறிந்து உதவுவதே சிறந்த தானம்.

கடைக்குட்டி said...

நண்பர் சாதிக் சொன்னதை நான் வழிமொழிகிறேன்...

கடைக்குட்டி said...

நெம்ப சூடா இருப்பீங்க போல தெரியுது... நம்ம கட பக்கம் வந்து கொஞ்சம் சிரிச்சுடுப் போறது... ஓட்டும் பின்னுட்டமும் போட்டாச்சு.. அப்ப நீங்கன்னு கேக்க மாட்டேன்.. அத செய்றதவிட வேற என்ன வேல..

நசரேயன் said...

நல்லா இருக்கு

எட்வின் said...

அருமையான கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்.பலருக்கு புரிவதில்லை இம்மண்ணில்.

malar said...

எனது பதிவை படித்து பின்னூட்டம் போட்ட வண்ணத்துபூச்சியார்,சாதிக் அலி,கடைக்குட்டி,நசரேயன் எட்வின் ஆகியோர்களுக்கு நன்றி

Unknown said...

மிகவும் அருமையான கருத்துக்கள். அனைவரும் புரிந்துக்கொண்டால் நல்லது

VIKNESHWARAN ADAKKALAM said...

பாவத்தை கழிக்க உதவி செய்ய வேண்டும் என்றில்லை. நம்மால் முடிந்ததை இயலாதவருக்கு செய்வது தான் மனித பண்னாகும்.

malar said...

/// VIKNESHWARAN said...

பாவத்தை கழிக்க உதவி செய்ய வேண்டும் என்றில்லை. நம்மால் முடிந்ததை இயலாதவருக்கு செய்வது தான் மனித பண்னாகும்.///

மனித குணமே ஒன்றை எதிர் பார்த்து மற்றொன்றை செய்வது தான் இல்லாபட்டவருக்கு உதவனும் எதையாவது சொல்லியாவது உதவட்டும் .உங்கள் வருகைக்கும் Mrs.Faizakader வருகைக்கும் நன்றி

நட்புடன் ஜமால் said...

சிந்தனை தூண்டும் நல்ல கருத்துகள்

ஆ.ஞானசேகரன் said...

//ஏழைகளுக்கு செய்யும் உதவி இறைவனுக்கு செய்யும் உதவி என்று அவருக்கு தெரிந்து இருக்கிறது.//

நல்ல பகிர்வு பாராட்டுகள்

malar said...

திரு .ஜமால் , ஆ.ஞானசேகரன் வருகைக்கு நன்றி.

ராம்.CM said...

நல்ல கருத்து மலர்! அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். நல்ல நடையில் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

malar said...

வாங்க திரு .ராம்.CM .உங்கள் வருகைக்கு நன்றி

kuma36 said...

///////malar said...
சரி !என்னை ஒருத்தர் தாறுமாறாக திட்டுகிறார் அவர் கோபபடும் வேகம் 100 டிகிரிக்கு மேல் அந்த நிலையில் நான் என்னசெய்ய வேண்டும் ? உங்கள் பதிலை என்பதிவுக்கே அனுப்புங்கள் .நன்றி
உங்கள் பதிவை தேடி அதில் உங்கள் பதிலை தேடி உங்கள் மெயில் id தொலைத்து///////

என் மெயில் ஐடி?? விளங்கவில்லை!!!

நல்ல கேள்வி என்னால முடியல! ஆமா அது எப்படி அவரின் கோபத்தின் அள‌வை கண்டுபிடிச்சிங்க?

சரி ஏன் ஒருத்தர் உங்களை தாறுமாறா திட்டனு அவருக்கென்ன லூசா? அப்படி திட்டுவதா இருந்தா அவரு திட்டுவதற்கு நீங்க ஏதாவது தவறு சொய்திருக்கனும் இல்லையா? சும்மா ஒன்னுமே பன்னாம யாரும் யாரையும் பொதுவாக திட்டுவதில்லை. பைத்தியகாரன்கள் வீதியோரம் போற வாற எல்லாத்தையும் திட்டுவதை கண்டிருக்கேன். அவனை நாம் ஒன்று கூறுவதில்லையே அதே போல் இருந்துவிட வேண்டியது தானே?

ஓகே அவரு ரொம்ப கோவகாரருனு வச்சுகுவோம் நீங்க அவரு கோபப்ப‌டும் போது அவருடைய கோபத்தை தணிக்க முயற்சி செய்யலாம், அவருடைய கோபம் உங்கள் மீது இருக்கும் பட்சத்தில் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சொல்வதே மேல்! அது இருவருக்கும் நன்மை பயக்கும்.

இவை தனிப்பட்ட என் கருத்து மாத்திரமே!

என்னை வைச்சு கொமடி கிமடி பன்னலையே?

இராகவன் நைஜிரியா said...

அருமையான கருத்துக்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பது உண்மையான வாசகம்.

kuma36 said...

///ஏழைகளுக்கு செய்யும் உதவி இறைவனுக்கு செய்யும் உதவி என்று அவருக்கு தெரிந்து இருக்கிறது.///

அருமையான கருத்துக்கள்

*இயற்கை ராஜி* said...

அருமை.

Thamiz Priyan said...

நல்ல பதிவு!

Suresh said...

Romba nalla unga pathiva padichitu varan, comment podama marnthutu tamilsh la votta mattum pottutu poiduvan romba arumaiya eluthuringa

i have become ur follower :-) thozli

ungalukkum unga kudumbathukkum ennoda tamil puthandu valthukkal


namma kadai pakkam time iruntha vanthutu ponga

Raju said...

நல்ல சிந்தனை மலர்...

எரிந்த்ரா said...

பணம் படைத்தவர்கள் அதிகமாக கோயில் , பள்ளிவாசல் என்று உண்டியலை நிரப்புவார்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் தனது ரத்த பந்தங்கள் வறுமையிலோ அல்லது படிப்பு செலவுக்கோ பணம் இல்லாமல் கஷ்டப்படுவார்கள் இவர்கள் கொடுத்து உதவமாட்டார்கள் .அவர்களுக்கு தெரியாதோ அதைவிட அதிக நன்மை இதில் உண்டென்று .
///
நல்ல கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்!!!
வாழ்த்துக்கள்!!

தேவன் மாயம் said...

நரகத்துக்கே ஒருவேளை நான் போறதாக இருந்தாலும் நான் மட்டும் போகமாட்டேன் என்னுடன் மேலும் ஆட்கள் எப்படியிம் வருவார்கள் அவர்களுடன் நானும் ஒருவனாக இருந்துகொள்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார் .
இது உண்மையில் நடந்த சம்பவம்.
///
நரகத்திலதான் உண்மையிலேயே கூட்டம் ஜே ஜே ந்னு இருக்கும்னு நினைக்கிறேன்!!!

ஷண்முகப்ரியன் said...

உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துகள்,சகோதரி.

Muruganandan M.K. said...

"ஏழைகளுக்கு செய்யும் உதவி இறைவனுக்கு செய்யும் உதவி"
நல்ல கருத்து.
இறைவனுக்கு உதவி செய்யும் என்பது உண்மையோ தெரியாது. ஆனால் மனத்திற்கு நிறைவு தரும்

சுரேஷ் சே said...

enadhu valayayaium konjam padiyungal

www.thamizhiname.blogspot.com

Unknown said...

நல்ல கருத்து. எல்லா விஷயத்திலுமே நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. ஆகவே எல்லா விஷயங்களும்(மதம் உட்பட) அந்த நியதிக்கு உட்பட்டே ஆக வேண்டும்.

வலைச்சரம் மூலமாக உங்களைக் காண நேர்ந்தது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

Suresh said...

மிக அழமான கருத்துள்ள பதிவு

//உங்க பதிவுக்கு தமிழ்ஷ்ல வோட்டு போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவு படிச்சு புடிச்சா தமிழ்ஷல வோட்ட போடுங்க


ஆளும் கட்சிக்கு வோட்டு ?

http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_29.html


சிலேட்டு சின்னத்தை பார்த்து. போடுங்கம்மா ஒட்டு !

http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_28.html//

Suresh said...

மிக அருமையான கருத்து மலர்

சும்மா நச் என்று இருந்தது தொடர்ந்து இந்த மாதிரி பதிவுகளும் வரட்டும் தோழி

ஆ.ஞானசேகரன் said...

//நரகத்துக்கே ஒருவேளை நான் போறதாக இருந்தாலும் நான் மட்டும் போகமாட்டேன் என்னுடன் மேலும் ஆட்கள் எப்படியிம் வருவார்கள் அவர்களுடன் நானும் ஒருவனாக இருந்துகொள்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார் .//

அடடே நீங்களுமா? வாருங்கள் எல்லோரும் ஒரு நல்ல இடத்தில் சந்திக்கலாம்..

கலையரசன் said...

வணக்கம் தோழி! என் வலையில் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன்..
(malar said... adutha thadavai entha park ?ethanai manikkku?)
21ஆம் தேதி இராகவன் நைஜிரியா அவர்கள் குடும்பத்துடன் வருகிறார்.
உங்களுக்கு விருப்பம் இருந்தால், அந்த சந்தி்ப்பில் கலந்து கொள்ளலாம்!
மேலஅதிக விபரங்களுக்கு...

Contact me - rkarasans@gmail.com

R.Gopi said...

//மனித குணமே ஒன்றை எதிர் பார்த்து மற்றொன்றை செய்வது தான் இல்லாபட்டவருக்கு உதவனும் எதையாவது சொல்லியாவது உதவட்டும் //

******

Well written article and well said Malar.

Do visit www.edakumadaku.blogspot.com regularly to see updates on the article about MIDDLE EAST.

கலாட்டா அம்மணி said...

நல்ல பதிவு..

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை அழுந்தச் சொல்லிருக்கிறிர்கள்.

Jaleela Kamal said...

நல்ல பகிர்வு

இது நம்ம ஆளு said...

ஏழைகளுக்கு செய்யும் உதவி இறைவனுக்கு செய்யும் உதவி என்று அவருக்கு தெரிந்து இருக்கிறது.
அருமை.
:)

அன்புடன் மலிக்கா said...

நல்ல கருத்து, உண்டியல்களை நிறப்புவதைவிட்டு விட்டு
ஒரு ஏழையின் பசியைப்போக்கி அவன் வயிற்றை நிறப்பட்டும் இம்மையிலும் மறுமையிலும் நல்பதவி பெற்றுக்கொள்ளட்டும்..

அதிரை அபூபக்கர் said...

நல்ல சிந்தனையான பதிவு..

ஆ.ஞானசேகரன் said...

நல்ல இடுகை வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

என் பக்கத்திற்கு வந்துவிட்டு செல்லுங்கள் அன்புடன் ஆ.ஞானசேகரன்