Friday, February 6, 2009

நான் ஒரு கதை படித்தேன் (படித்ததில் பிடித்தது )

இந்த பதிவு மனைவி சும்மாவே வீட்டில் இருந்து பொழுதை களிக்குரார்கள் என்று நினைக்கும் ஆண்களுக்கு .
 
தினம் அலுவலகத்துக்கு போகும் கணவன் மனைவியை பார்த்து பொறாமை 

பட்டு இறைவனிடம் ஒரு வரம் கேட்கிறான் .எப்படி? ஒரு நாள் மட்டும் நான்  

மனைவியாகவும் அவள் கணவனாகவும் இருக்க உதவி புரிவாயாக என்று  

கேட்டான் .இறைவன் அப்படியே ஆகட்டும் என்று வரம் கொடுத்தான்.


அடுத்தநாளில் இருந்து கணவன் மனைவியாக எழுந்து டீ போட்டு பிள்ளைகளை  

பள்ளிக்கூடம் அனுப்பி கணவனை அலுவலகத்துக்கு அனுப்பி மளிகை கடை

EB,ரேசன் கடை இப்படி வெளி வேலை களை முடித்து பின்பு மதிய வேலை , 

,அப்புறம் பள்ளி விட்டு வரும் குழைந்தைகள் அலுவலகம் விட்டு வரும் கணவன் 
இவர்களுக்கு கொடுக்க வேண்டிய மாலை உணவுவகைகளை

கொடுத்து விட்டு ,பின்பு பிள்ளைகளை படிகவைது இரவு உணவை 

கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் கொடுத்துவிட்டு பாத்திரம் 

கழுவிவிட்டு அப்புறம் என்ன படுக்க போயாச்சு .....கணவன் ஆசைய 

நிறைவிதனுமே நிறைவேத்தியாச்சு .அப்புறம் மனைவி இறைவனிடம்|  

அலுத்து சடச்சு ஆள விடய்யா சாமி எனக்கு இந்த மனைவி போஸ்டே  

வேண்டாம் நான் கணவனாகவே இருந்துதுட்டு போறேன் நான் கணவனாக

மாற அருள் புரிவாயாக என்றுகேட்டார் .நம்ம ஆண்டவன் விடுவாரா? 

ஆண்டவன் நாம்ம ஆளிடம் தம்பி நீ நேற்று இரவு .......முந்தானை முடிச்சு 

பாக்கியராஜ் ச்டய்லி நடந்த கசமுசாவில் நீ பிள்ளைதாச்சி ஆயிட்ட 10 

மாதத்துக்கு அப்புறம் நீ கணவனாக மாறுவதை பற்றி

யோசிக்கலாம் என்று சொல்லி மறைந்துவிட்டார் .அப்புறம் என்ன பிள்ளைதாச்சி அவஸ்ததான் பெரும் அவ்ச்தயாச்சே .

15 comments:

RAMASUBRAMANIA SHARMA said...

இது ரொம்ப பழய காமெடி....ஆனாலும் நல்லாத்தான் இருந்துச்சு....!!!

இய‌ற்கை said...

:-))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நல்ல காமெடி மலரு..

ஏன் திரட்டிகளில் இணையவில்லை..?

நான் இப்போதுதான் தங்களைப் பற்றிக் கேள்விப்படுகிறேன்..

வாழ்க வளமுடன்..

வண்ணத்துபூச்சியார் said...

நல்லாயிருக்கு..

வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

சிரிக்க

சிந்திக்க

malar said...

//ஏன் திரட்டிகளில் இணையவில்லை..?//

திரட்டி என்றால் என்ன?

benzaloy said...

பிள்ளைதாச்சி பிரச்சனை என்று கருதுகிறீர்கள் போல தென்படுகுது

பிள்ளையை தாங்கி பெற்றெடுத்து பெருமைபட்டு வளர்த்தெடுக்கும்
போது பற்பல கனாக்கள் கண்டு பிள்ளையின் கெட்டிதனங்களை கண்டு
ஏனையோர் பொறாமை படும்போது தனக்குளே பெருமை படும் தாயை
நினைத்துப் பாருங்கள்

கணவனை பக்குவமாக கவனிக்கும் மனைவியின் காலடியில் மன
ரம்மியத்துடன் வீழ்ந்திருக்கும் கணவனை புன்முறுவலுடன் நெருடி
கொடுக்கும் மனைவியின் மன நிலையை பாருங்கள்

கர்ப்பிணி பெண்ணுக்கு இருக்கும் மேன்மை எங்களுக்கு இல்லவே இல்லை !

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///malar said...
//ஏன் திரட்டிகளில் இணையவில்லை..?//
திரட்டி என்றால் என்ன?///

திரட்டி என்பது வலைப்பதிவுகளின் சங்கமம். திரட்டிகளில் இணைந்திருக்கும் வலைப்பதிவுகள் அனைத்தையும் ஒருங்கே காட்டும்.

புதிய பதிவுகளை உடனுக்குடன் காட்டுவதால் பதிவர்கள் அனைவருக்கும் உபயோகமானது திரட்டிதான்..

www.thamizmanam.com, www.tamilish.com, www.tamilveli.com

இவைகளில் தங்களுடைய தளத்தை இணைத்துக் கொள்ளுங்கள்.. பின்பு நீங்கள் எழுதும் புதிய பதிவுகளையும் இதில் இணையுங்கள்..

பார்வையாளர்கள் அதிகம் பேர் உங்களுடைய தளத்தைப் பார்வையிட்டு பதிவுகளைப் படித்து பின்னூட்டம் இடுவார்கள்..

நட்பு வட்டம் வளரும். தங்களுக்கும் எழுதுவதற்கு மிகுந்த ஆர்வம் பிறக்கும்..

முயற்சி செய்யுங்கள்.. வெற்றி பெற வாழ்த்துகிறேன்..

வாழ்க வளமுடன்

thevanmayam said...

ஆண்டவன் நாம்ம ஆளிடம் தம்பி நீ நேற்று இரவு .......முந்தானை முடிச்சு

பாக்கியராஜ் ச்டய்லி நடந்த கசமுசாவில் நீ பிள்ளைதாச்சி ஆயிட்ட 10

மாதத்துக்கு அப்புறம் நீ கணவனாக மாறுவதை பற்றி///

ஆஹா அருமையான கதை!!

thevanmayam said...

//ஏன் திரட்டிகளில் இணையவில்லை..?//

திரட்டி என்றால் என்ன?//

முதலில் தமிழ்மணத்தில்/தமிலிஷ் இணையுங்கள்!!

ஆ.ஞானசேகரன் said...

நன்றாக இருக்கின்றது, தொடருங்கள்

கீழை ராஸா said...

ஏன் இந்த கொலை வெறி..?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

சுவார்ஸமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நல்ல கதை.. :)

மாதேவி said...

"ஆள விடய்யா சாமி எனக்கு இந்த மனைவி போஸ்டே
வேண்டாம் நான் கணவனாகவே இருந்துதுட்டு போறேன் ..." இதனைப் படித்துவிட்டு எத்தனை பேர் ஓடி ஒழியப் போகிறார்களோ?